text
stringlengths
4
969
மாவட்ட மட்டத்தில் தகவல் மத்திய நிலையங்களை நிறுவுதல்,
புவியியல் அமைவு, வரலாற்றுப் பின்னணி, பயிரிடப்படும் பயிரினங்கள், வீதி முறைமை அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், புகையிரத நிலையங்கள் மற்றும் பேரூந்து தரிப்பிடங்கள் ஆகிய அனைத்து தகவல்களும் கணனிமயப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட தகவல் மத்திய நிலையங்களை நிறுவுவதற்கும், அதன் முதலாவது கட்டத்தின் போது மகாகாண மட்டத்திலும் இரண்டாவது கட்டத்தின் போது மாவட்ட மட்டத்திலும் மூன்றாவது கட்டத்தின் போது பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேச மட்டத்திலும் இந்நிலையங்களை நிறுவவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
இலங்கையில் அறநெறி பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாகத்தை ஒழுங்கு முறைப்படுத்தல்,
இலங்கையில் சகல மதங்களினதும் அறநெறி பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாகத்தை மேலும் ஒழுங்கு முறைப்படுத்துவதற்கும் பெளத்த அறநெறி பாசாலைகளில் காணப்படும் அறநெறி இறுதிப் பரீட்சை மற்றும் அறநெறி தர்மாசார்ய பரீட்சை மற்றும் சகல மதங்களினதும் அறநெறி பாடசாலைகளில் நடாத்தப்படும் இவற்றுக்கு இணையான பரீட்சைகளின் சான்றிதழ்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குதலும், அறநெறிப் பாடசாலைக்கு தொடர்ச்சியான மனித வளங்களுடன் பெளதீக வளங்களையும் வழங்குவதன் மூலம் அறநெறிப் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு துரித வேலைத்திட்டமொன்றை வகுத்தலும் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
நாய்கள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்தல் தொடர்பான சட்டங்களை வகுத்தல்,
வீடுகளில் அல்லது விற்பனை செய்வதற்காக வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை உள்ளூராட்சி நிறுவனங்களில் பதிவு செய்யத் தேவையான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென்பதோடு, குறித்த பிராணிகளின் குட்டிகளை, சட்டரீதியான அனுமதி பெற்ற நிலையங்களில் மாத்திரம் விற்பனை செய்தல் வேண்டுமெனவும் அவ்வாறல்லாத இடங்களில் வளர்க்கப்படும் பெண்ணினப் பிராணிகளை கட்டாயமாக மலடாக்கலுக்கு உட்படுத்துவதற்கும், தேவையான சட்டங்கள் வகுக்கப்படவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
தொழில் சந்தைக்குத் தேவையான ஊழியர்களை பயிற்றுவித்தல்,
எதிர்காலத்தில் இலங்கையில் உருவாகும் புதிய தொழில் வாய்ப்புகளுக்குத் தேவையான ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் வழியொன்றைத் தொடங்கி வைக்கும் பணியை மிகவும் வினைத்திறனான வகையில், நாட்டினுள் காணப்படும் அனைத்து மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களினூடாக ஆரம்பித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
பொதுநிர்வாக கட்டமைப்பை மறுசீரமைத்தல்,
தற்சமயம் பொதுநிர்வாக அமைச்சினால் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லைகளை மீள நிர்ணயிப்பதற்கனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதோடு அவ்வாறு எல்லை நிர்ணயம் செய்யப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளினூடாக புதிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேச எல்லைகளையும் புதிய மாவட்ட எல்லைகளையும் நிர்ணயிக்க வேண்டுமெனவும், இவ்வாறு நிர்ணயிக்கப்படும் பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்கள் உள்ளூராட்சி மன்ற ஆளுகைப் பிரதேசங்களாக மாற்றியமைக்க வேண்டுமெனவும், அத்தகைய ஆளுகைப் பிரதேசத்தினுள் கோட்டக் கல்வி அதிகாரப் பிரதேசம், பொலிஸ் அதிகாரப் பிரதேசம், கமநல சேவைகள் அதிகாரப் பிரதேசம், பிரதேச சுகாதார சேவை உத்தியோகத்தர் அதிகாரப் பிரசேதம் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களினதும் அதிகாரப் பிரதேச எல்லைகள் உள்ளடங்கும் வகையில் ஒட்டுமொத்தமான பொதுத்துறைக் கட்டமைப்பும் திருத்தப்பட வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
நில்வளா கங்கை திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பித்தல்,
மாத்தறை மாவட்டத்தின் நில்வளா கங்கை திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் முடங்கியிருப்பதால் அப்பள்ளத்தாக்கின் ஊட்டப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நில்வளா கங்கை திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளை விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்களின் பிரதிநிதிகளின் பதவிக் காலத்துக்குப் பின்னரும், சமாதான நீதவான் பதவியினை வழங்குதல்,—
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுகின்ற, சமாதான நீதவான் பதவியானது, அவர்களது பதவிக் காலத்துக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளதாலும், இப்பதவிக்காலத்தின் பின்னரும், அவர்களிடம் மேற்படி சேவையினைப் பெறுவதற்காக வரும் அநேகமானோர் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதாலும், இம் மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது பதவிக் காலத்தின் பின்னரும், சமாதான நீதவான் பதவியினை வழங்குவதற்கான தகுந்ததொரு வேலைத் திட்டத்தினை வகுத்தல் வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரினதும் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் குறித்து மீளாய்வு செய்தல்,—
நாட்டில் தற்போது இயங்கி வருகின்ற மாகாண சபைகள் மற்றும் எதிர்காலத்தில் ஒழுங்கு முறையாக செயற்படவுள்ள வடமாகாண சபையின், கெளரவ அமைச்சர்கள், தவிசாளர்கள், உபதவிசாளர்கள், ஆளும் கட்சியின் முதற்கோலாசான், சபைத் தலைவர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள், எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் கெளரவ உறுப்பினர்கள் ஆகியேரரின் கொடுப்பனவுகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் ஒழுங்கான முறையில் காணப்படாமையினால், இது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அதற்கான ஒழங்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
உள்ளுராட்சி நிறுவனங்களின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்தல்,—
நாட்டில் நடைமுறையிலுள்ள மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து மாநகர சபை, நகர சபை, மற்றும் பிரதேச சபைகளினதும் நகரபிதாக்கள், நகர சபைத் தலைவர்கள், மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதி நகரபிதாக்கள், பிரதி நகர சபைத் தலைவர்கள், உப தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கெளரவ உறுப்பினர்கள் ஆகியேரரின் கொடுப்பனவுகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் ஒழுங்குமுறையாக இல்லாத காரணத்த்தால் இது தொட்பாக ஆழமாக ஆராய்ந்து இதற்கான ஒழுங்குமுறையுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
வடக்கு கிழக்கில் காணாமற் போன தமிழ் மக்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல்,
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் நடைபெற்ற கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு காரணங்களால் காணாமற் போயுள்ளவர்கள் தற்போது உயிர் வாழ்கின்றார்களா, இல்லையா என்பதையிட்டு துரிதமாக விசாரணை செய்து, இவர்கள் உயிருடன் இல்லாதிருப்பின் இவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
தேசிய இளைஞர் கொள்கையொன்றை வகுத்தல்,
அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிகுழுவொன்றை நியமித்து, இலங்கைக்கு உகந்த தேசிய இளைஞர் கொள்கையொன்றை வகுத்தல் ஆரம்பிக்கப்பட்ட வேண்டுமெனவும் அந்நோக்கத்திற்காக அதனுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ச்சி பெற்றவர்கள் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளினதும் அதேபோன்று அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
அரசாங்க பாடசாலைகளையும், பல்கலைக் கழகங்களையும் விடுமுறை நாட்களில் கற்கை அலகுகளுக்காகப் பெற்றுக்கொடுத்தல்,—
அரசாங்க பாடசாலைகளின் விடுமுறை நாட்களிலும் பிற்பகல் நேரத்திலும், பல்கலைக்கழகங்களின் விடுமுறை நாட்களிலும், அந்த நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு, வர்த்தக சமுதாயத்தினரையும், அரச சார்பற்ற அமைப்புகளையும், வர்த்தகச் சபைகளையும், சமுதாய அடிப்படையிலான அமைப்புகளையும் இணைத்துக்கொள்கின்றதான விரிவானதொரு வேலைத்திட்டமாக, முதியோர் மற்றும் முறைசாரா கற்கை அலகுகள் சலுகைக் கட்டண அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
வெற்றிடமாகின்ற கிராம உத்தியோகத்தர் பதவிகளில் பதிற் கடமை புரியும் நியமனங்களுக்காக வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றைத் தயரரித்தல்,—
கிராம உத்தியோகத்தர் பதவியில் வெற்றிடம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அண்மையிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் மிகச் சிறியதொரு கொடுப்பனவின் அடிப்படையில் பதிற்கடமைக்காக நியமிக்கப்படுவதாலும், மேற்படி பதிற் கடமை நியமனத்தின் மூலம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டினதும் வினைத்திறன் வீழ்ச்சயடைவதாலும், இந்த நிலைமையை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராம உத்தியோகத்தர் சேர்மம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பதோடு, வெற்றிடம் ஏற்படுகின்ற பிரிவுகளுக்கு மேற்படி சேர்மத்திலிருந்து கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும், மேற்படி சேர்மத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை, பிரதேச செயலாளரினால் ஒப்படைக்கப்படுகின்ற வேறு பயனுள்ள துறைகளில் அல்லது கடமைகளில் ஈடுபடுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
தற்போது செயற்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்குகளுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குதல்,
சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அமைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களின் தலைமை தேரர், மதகுரு, பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கமத்தொழில் ஆராய்ச்சி உதவியாளர், சனசபைச் செயலாளர்கள், பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உத்தியோகத்தர், மற்றும் உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தொண்டர் அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் உரிய பிரிவில் வசிக்கும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதை மிகவும் எளிதாக்கும் பொருட்டு தற்போதைய சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமொன்றை வழங்கக்கூடியவாறான பாராளுமன்றச் சட்டமொன்று நிறைவேற்றப்படுதல் வேண்டுமெனவும் அதனூடாக கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெறுகின்ற குற்றச் செயல்கள், துர்நடத்தைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் சிறந்த தொடர்பைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமானவாறு குறித்த சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
நாட்டில் தற்பொது அமுலில் உள்ள காலங்கடந்த சட்டங்களை இற்றைப்படுத்துதல்,
தற்போதும் இலங்கையில் ஏகாதிபத்திய வழிகளின் காலத்தில் அறிமுகஞ் செய்யப்பட்ட சட்டங்கள் அமுலாகிவருவதால் காலங்கடந்த தண்டனைகள், தண்டப்பணம் என்பவற்றை இற்றைப்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
தேர்தல்ள் அனைத்தையும் ஒரே நாளில் நடத்துதல்,
இலங்கையில் 1988 இல் இருந்து 2010 வரையான 22 வருட காலப்பகுதிக்குள் ஆண்டுகளைத் தவிர்ந்த ஏனைய ஒவ்வோர் ஆண்டிலும் ஏதேனும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதோடு அவ்விதமாக தேர்தல்களை நடத்துதலானது மக்களின் அபிப்பிராயத்தைக் கண்டறிவதற்கான பெறுமதி மிக்க அளவுகோலாக அமைந்த போதிலும், இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம், நிருவாகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தப்படுவதால் உள்ளூராட்சித் தேர்தல்கள், பொதுத்தேர்தல்கள் மற்றும் சனாதிபதித் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கேதுவாக மேற்படி நிறுவனங்களின் பதவிக் காலத்தை திருத்தியமைக்கவும் பொருத்தமான தேர்தல் வழிமுறையொன்றை உருவாக்கவும் தகுந்தவாறு அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
பாராளுமன்ற சனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளுதல்,
நாட்டினுள் சனநாயகத்தை மேலும் வலுவூட்டும் நோக்கத்துடன் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கிடையிலும், மாகாண சபைகளுக்கும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கிடையிலும் சிறந்த இணைப்பினை பேணிவருதல் அத்தியாவசியமாயுள்ளதோடு, இதற்கு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதிசெய்வதற்கும் மாகாண சபை தலைவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதி செய்வதற்குமான செயல்முறையொன்றை தயரரிப்பதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தமொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்,
தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் சிங்கள மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும், அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல் வேண்டுமென்பதுடன், அரச மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமன்றி அச்சு ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொண்டு இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
வாழ்க்கைத் துணையின் தகாத செயல்களினால் நிர்க்கதிக்குள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணமளித்தல்,
திருமணமான கணவன் மனைவி தம்பதிகள் ஒரே வீட்டில் வாழ்கின்ற சந்தர்ப்பங்களில் கணவன் அல்லது மனைவி மதுபாவனை சூதாட்டம் அல்லது வேறு துர்நடத்தைகளில் ஈடுபட்டு, காணி, வீடு அல்லது வீட்டுப் பாவனைப் பொருட்களை தனது தற்றுணிபின் பிரகாரம் விற்பதன் காரணமாக அல்லது வேறு நபர்களுக்கு ஒப்படைப்பதன் காரணமாக மற்றைய தரப்பினருடன் பிள்ளைகளும் கடும் நிர்க்கதி நிலைக்குள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் அந்நிலைமையை தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
ஒழுக்க நெறிகள் பற்றிய குழுவை தாபித்தல்,
இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மையையும் அவர்களிடத்தில் உயரிய ஒழுக்க நெறிகளையும் பேணவேண்டிய தேவைப்பாட்டைப் பற்றி ஆராய்வதற்காக ஒழுக்க நெறிகள் பற்றிய குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குதல்,
நிர்வாகத்தை எளிதாக்குதல், குற்றங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் ஏனைய மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைப்பதற்காக, குறித்த நபரின் இரத்தப் பிரிவு, வங்கிகக் கணக்குகள், கடன் அட்டை, கல்வித் தகைமை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வெளிநாட்டுப் பிரயாண கடவுச்சீட்டு இலக்கம் ஆகிய முக்கியமானதும் தேவையானதுமான தகவல்களை உள்ளடக்கிய புதிய இலத்திரனியல் இலக்கத்துடனான, தேசிய அடையாள அட்டையொன்று வழங்கப்படுதல் வேண்டும் எனவும், பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் அனைவரது தகவல்களையும், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் கணனிமயப்படுத்தலை துரிதப்படுத்தல் வேண்டும் எனவும் இத் தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படல் வேண்டும் எனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பளித்தல்,—
பொலிஸ் திணைக்களத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், சுயவிருப்பில் ஓய்வு பெறுவதற்கான இயலுமானது, ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் ஏற்புடையதாதல் வேண்டுமென்றும் அதற்கான செயல்முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
ஒழுங்குவிதிகளை நீக்குவதற்கான குழுவை தாபித்தல்,
ஒழுங்குவிதிகள் உருவாக்கப்படுவதும் நீக்கப்படுவதும் அன்றாடம் இடம்பெறும் நடைமுறையாதலால், காலம் கடந்த ஒழுங்குவிதிகளை நீக்குவது பற்றி ஆராய்வதன் பொருட்டு ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கான குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
சிவில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த உத்தியோகத்தர்களை, சேவையில் நிரந்தரமாக்கல்,
சிவில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்கத்தின் ஏனைய பாதுகாப்புப் பிரிவுகளில் மற்றும் திணைக்களங்களில் சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு உள்ளதைப் போன்று சம்பளம், கொடுப்பனவு, நிரந்தர சேவை மற்றும் ஓய்வூதியத்துடனான உத்தியோக அந்தஸ்து வழங்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
உறுதியளித்தல் பற்றிய குழுவை தாபித்தல்,
பாராளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடைகளாக அரசாங்கம் வழங்கும உறுதி மொழிகளும் அரசாங்கத்தின் கடப்பாடுகளும் மீறப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாயுள்ளதால் அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதையும் அவை தொடர்பில் பொறுப்புக் கூறுவதையும் உறுதி செய்யும் பொருட்டு உறுதியளித்தல் பற்றிய குழுக்களை தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,
பனை மர விளைச்சலுக்கு ஊக்கமளித்தல்,
கற்பகதரு எனஅழைக்கப்படும் பொதுமக்களுக்கு மிக்க பயனைப் பெற்றுத்தரும் பனை மர விளைச்சலுக்கு ஊக்கமளித்து பனைப் பொருள் அபிவிருத்திக்காய் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இச்சபை தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல்,
இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களையும் அனுமதியற்ற குடியிருப்பாளர்களையும் துரிதமாக அப்புறப்படுத்தி சட்டரீதியான கட்டுமானங்கள் தொடர்பான உடன்படிக்கைகளை மீளாய்வுக்குட்படுத்துவதன் மூலம் திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பதுடன், திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் துறைக்கு வழங்கி, அந்நிதியை புகையிரத வலைப்பின்னலின் நவீனமயமாக்கலுக்கு பயன்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
பிச்சைக்காரர்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கான முறையியலொன்றைத் தயரரித்தல்,
தற்போது பிச்சைக்காரர்களின் வாழ்வுக்கு பரரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வைப் பேணிக்காக்கும் பொருட்டு, அவர்களுக்கு பயிரிடுவதற்கான காணிகளை வழங்கி அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் அவர்களது வாழ்வின் பாதுகாப்பினையும் போசனையையும் உறுதிப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுப்பதற்காக முறையியலொன்றைத் தயரரித்தல்,—
கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுக்கும் நோக்கத்தோடு, அரசாங்கம் நிலப் பரப்பொன்றை ஒதுக்கி கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களை அவ்விடத்திற்குக் கொண்டுசென்று அவற்றைப் பராமரிப்பதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை விதித்தல்,
நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்துவரும் நிலைமை ஏற்பட்டுள்ளதால், அது தொடர்பாக தற்போதுள்ள சட்ட விதிகள் போதியதாக இல்லாதிருப்பின், புதிய சட்ட விதிகளை புதிதாக நிறைவேற்றி மிகவும் துரிதமாக இது தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கரையோர நுழைவுப் பாதைகளை அமைத்தல்,
நாட்டின் கரையோர வலயத்தில் துரிதமாக இடம்பெறுகின்ற நிர்மாணங்கள் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடற்கரைக்கு பிரவேசிப்பதில் அசெளகரியம் ஏற்படுதலானது, சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் கடற்றொழிலை மேற்கொள்வதற்கும் தடைகளை ஏற்படுத்துவதனால், இந்நிலமையை தடுப்பதற்கும் இத்துறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டும் கடற்கரை நுழைவுப் பாதை முறைமையொன்று அமைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்,
அதிபர் சேவை, ஆசிரியர் சேவை, கல்வி நிருவாக சேவை ஆகிய சேவைகளில் பரரிய சம்பள முரண்பாடுகள் நிலவுவதால் இந்நிலைமையை போக்கி இவர்களின் சுய கெளரவத்திற்கு உகந்ததொரு சம்பளத்தைக் கிடைக்கச் செய்யும் வகையில், சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்குரிய முறையியலொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
பெளத்த பிக்குக் கல்வியை மேம்படுத்துதல்,
பெளத்த பிக்குமார்களின் மத அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர்களின் பேச்சாற்றல், செவிமடுக்கும் ஆற்றல், கனணி, உளவியல் மற்றும் ஆலோசனை பற்றிய அறிவு என்பவற்றை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள பிக்குக் கல்வி நிறுவனங்களுக்குப் புறம்பாக இப்பணிக்ளுக்கே ஒதுக்கப்பட்டதான பிக்குக் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான முறையியலொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தரரிசு சேவையை இற்றைப்படுத்துதல்,