text
stringlengths 4
969
|
|---|
அம்பாறை மாவட்டத்தில் கல்ஒய திட்டத்தின் ஆரம்பிப்புடன் அமைக்கப்பட்ட அம்பாறை நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான “வெளிக்கள விடுதி” அழிவடைகின்றதென்பதை அவர் அறிவாரா?
|
மேற்படி வெளிக்கள விடுதியை துரிதமாக புனரமைத்து அத்திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடைய தங்குமிட வசதிகளை பூர்த்திச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா;
|
அதற்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதா;
|
ஆமெனில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்
|
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
|
இன்றேல், ஏன்?
|
கெளரவ தயாசிறி ஜயசேகர,
|
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,
|
2011 ஆம் ஆண்டுக்காக லக் சதொச நிறுவனத்துக்கு அரிசி வழங்கிய வழங்குநர் அல்லது வழங்குநர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள் யாவை;
|
மேற்படி வழங்குநர்களை தெரிவு செய்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா;
|
ஆமெனில், குறித்த கேள்விப் பத்திரத்துக்காக விலை மனுக்களைச் சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;
|
மேற்படி கேள்விப் பத்திரத்துக்கமைய வழங்குநர்களினால் அரிசி வழங்க வேண்டிய கால எல்லை யாது
|
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
|
இன்றேல், ஏன்?
|
கெளரவ சஜித் பிரேமதாஸ,
|
நிர்மாண,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,
|
மஹிந்த சிந்தனை இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைகளில் ஜனசெவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் வருடமொன்றில் தலா 25 வீடுகளை நிர்மாணிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டு்ள்ளதென்பதை அவர் அறிவாரா?
|
மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் தற்போது நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பயனாளிகள் குடியமர்த்தப்பட்டு்ள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனை;
|
மேற்படி வீடுகள் அமைந்துள்ள கிராமங்களின் பெயர்கள் யாதென்பதையும்;
|
வீடொன்றை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட தொகை யாதென்பதையும்
|
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
|
இன்றேல், ஏன்?
|
கெளரவ புத்திக பத்திரண,
|
விளையாட்டுத் துறை அமைச்சரைக் கேட்பதற்கு,
|
2011 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் சம்பந்தமாக இலங்கை கிரிக்கட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செலவீனங்கள் பற்றிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பாரா?
|
இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்ட கம்பனியின் பெயர் யாதென்பதையும்;
|
மேற்படி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தராக செயற்படுகின்ற நபர் யாரென்பதையும்
|
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
|
2011 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடருக்காக இலங்கைக்குக் கிடைத்த பெரும் பணத்தொகையிலிருந்து அம்பாந்தொட்டை விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கும் ஏனைய மைதானங்களுக்காகவும் செலவிடப்பட்டத் தொகை தனித் தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
|
இன்றேல், ஏன்?
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
வெளிநாட்டுவேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,
|
அரசாங்கத்தினால் 2004 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை வேலைவாய்ப்புகளுக்காக இத்தாலி, மலேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கையை வருட வரரியாகவும்;
|
இத்தாலி, மலேசியா ஆகிய நாடுகளுக்கு நபர்களை அனுப்புவதன் மூலப்பிரமாணங்களையும்;
|
அந்நாடுகளில் வேலை ஒன்றை வழங்குவதற்கு ஒவ்வொரு நபரிடமும் இருந்து அறவிடப்பட்டுள்ள தொகையையும்;
|
அரசாங்கத்தினால் மேற்படி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரினது வேலை ஒப்பந்தத்திற்கான கால அளவையும்;
|
அந்நாடுகளில் தொழில்புரியும் நபர் ஒருவரின் சராசரி வேதனத்தையும்
|
அவர் கூறுவாரா?
|
இன்றேல், ஏன்?
|
கெளரவ தயாசிறி ஜயசேகர,
|
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,
|
வரரியபொல நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடமேற்கு பொருளாதார மத்திய நிலையத்துக்கு அடிக்கல் நடப்பட்ட திகதி யாது;
|
இதன் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட திகதி யாது;
|
இதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட பணத்தொகை யாது;
|
இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்தியாகின்றபோது செலவழிக்கப்பட்டுள்ள பணத்தொகை யாது
|
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
|
மேற்படி பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது;
|
தற்போது மேற்படி நிலையத்தில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை
|
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
|
வரரியபொலவில் பொருளாதார மத்திய நிலையமொன்றினை அமைப்பதற்கு ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை;
|
மேற்படி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர் யார்;
|
இதற்காக மாதாந்தம் அல்லது வருடாந்தம் குத்தகை அல்லது வாடகை செலுத்தப்படுகின்றதா
|
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
|
இன்றேல், ஏன்?
|
கெளரவ சஜித் பிரேமதாஸ,
|
நிர்மாண,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,
|
மஹிந்த சிந்தனை இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைகளில் ஜனசெவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், முதல் ஐந்து ஆண்டுகளில் வட்டியை மட்டும் செலுத்துவதற்கான வசதியைக் கொண்ட வீடமைப்புக் கடன் திட்டமொன்றை உருவாக்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு்ள்ளதென்பதை அவர் அறிவாரா?
|
மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் உரிய வீடமைப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்;
|
இது வரை மேற்படி வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டு்ள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
|
வீடமைப்புக் கடன் வழங்கப்படும்போது பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படை யாதென்பதையும்
|
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
|
இன்றேல், ஏன்?
|
அனுதாபப் பிரேரணை
|
காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஏ.எம்.டி. ராஜன்,
|
பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல்.
|
பாராளுமன்றச் சபை முதல்வர்,
|
பாராளுமன்ற அமர்வு,
|
7ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2011.04.07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல் இன்றைய தினம் சபை அமர்வு நேரம் பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 6.30 மணிவரை இருக்குமாக.
|
பி.ப. 3.30 மணிக்கு 7(5) ஆம் இலக்க நிலையியற் கட்டளை தொழிற்படுமாக.
|
பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைத்தல்,
|
நாட்டில் தேசிய மனப்பாங்கை ஏற்படுத்துமுகமாக பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாக முன்னரும் ஒத்திவைக்க முன்னரும் பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டு மென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
பலமான இலங்கை அடையாளத்தை ஏற்படுத்துதல்,
|
அரச ஆவணங்களில் ஒருவரது சாதியையும் சமயத்தையும் வெளிப்படுத்த வேண்டுமென்ற தேவைப்பாடு பலமான தேசிய அடையாளத்தை ஏற்படுத்துவற்கு தடையாகவும் இடர்ப்பா டகவுமுள்ளதால் இத்தேவைப்பாட்டிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென்று இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
வர்த்தக நோக்கங்களுக்காக சமயத் தலைவர்களின் உருவங்களை பயன்படுத்துவதை தடைசெய்தல்,
|
சகல சமயங்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டுமென்பதுடன் புத்தபெருமான், யேசுநாதர், சிவபெருமான், முஹம்மட் நபி (ஸல்) அவர்கள் ஆகியேரரின் உருவங்களை வர்த்தக விளம்பரங்களிலோ வேறுவிதமான சமயசார்பற்ற படிவங்களிலோ பயன்படுத்தலை தடைசெய்தலும் வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
நீதிமன்றங்களை அவமதித்தல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை ஆக்குதல்,
|
சகலருக்கும் சமமான நியாயத்தை உறுதிப்படுத்துவதற்காக சனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பலமான சுதந்திர ஊடகவியலை ஏற்படுத்துவதற்கும் நீதிமன்றங்களை அவமதித்தல் நடைமுறை களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை ஆக்க வேண்டுமென்று இப்பாராளு மன்றம் தீர்மானிக்கின்றது.
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
பொதுமக்களின் நலனுக்கான சட்டநடவடிக்கை களுக்காக சட்டங்களை அறிமுகப்படுத்தல்,
|
வறிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீறுதல், அரசாங்க கொள்கைகளில் உள்ளடக்கம் மற்றும் நடாத்துதல், மாநகர சபைகள் அதிகரரிகளினால் பொதுக் கடமைகள் நிறைவேற்றுதல், சமய உரிமைகள் அல்லது அடிப்படை உரிமைகள் மீறுதல் மற்றும் பொதுமக்களை கடனாளிகளாக்குகின்ற அல்லது அவர்களுக்கு மேலதிக பொறுப்புகள் ஏற்படுத்துகின்ற ஊழல்கள் ஆகியவை தொடர்பில் பொதுமக்களின் நலனுக்கான சட்டநடவடிக்கைகளுக்காக சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
அரசியல் கட்சிகளினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி கணக்காய்வு அறிக்கைகள் சமர்ப்பித்தல்,
|
எல்லா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினாலும் பெறப்பட்ட வருமானமும் செலவிடப்பட்ட செலவினமும் பற்றிய கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டுமெனவும் வருடம் தோறும் தேர்தல் ஆணைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுதலும் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
அரச அலுவலர்களுக்கு தண்டனை வழங்குதல்,
|
அரச உயர் அலுவலர்கள் தமது சுதந்திர நிலைமையை அரசியல் மயமாக்கி மற்றும் அவர்கள் முறைகேடாக நடந்தால் அதனால் அவர்கள் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்களை கையளித்து தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
ஓய்வு பெறும் வயதெல்லையை நீடித்தல்,
|
அரச அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 வருடம்வரை நீடிக்கப்பட வேண்டுமென்றும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் விசேட திறமையுள்ள அரச அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 70 வருடம்வரை நீடிக்கப்பட வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
கல்வியைப் பாதுகாப்பதற்காக தரப் பாதுகாப்பு பேரவையொன்றை நிறுவுதல்,
|
பொறுப்பற்ற முறையில் பல்கலைக்கழக பெயர்களை பாவித்து இலங்கையினுள் பல கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படுவதனால் கல்வியை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக “தரப் பாதுகாப்பு பேரவையொன்றை” சட்டத்தின் மூலம் உடனடியாக நிறுவ வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
|
கெளரவ ரவி கருணாநாயக்க,
|
விசேட வழக்குத் தொடுநர் எனப்படும் பதவியொன்றை உருவாக்குதல்,
|
அரச சேவை அரசியல் தலையீடுகளிலிருந்து விலக்குவதற்காக சுதந்திர ஆணைக்குழுக்கள், அரசாங்க கணக்குக் குழு, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றினால் நிறுவனங்களில் செயற்றிறமை பாதிக்கின்ற மோசடிகள், ஊழல்கள், செயற்திறமையில்லாமை ஆகியவற்றை கண்டுபிடித்த உடனே பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக அவற்றுக்கெதிராக வழக்குத் தொடுக்கப்படுவதற்கு ‘‘விசேட வழக்குத் தொடுநர்” எனப்படும் பதவியொன்று உருவாக்கப்பட வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.